மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை ‘ப்பூ’ என ஊதித்தள்ளி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த ‘ரதிநிர்வேதம்’ சமீபத்தில் வெளியான ‘களிமண்ணு’ ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன். ஒரு நடிகையாக மட்டுமின்றி ஸ்வேதா மேனனுக்குள் ஒரு எழுத்தாளரும் மறைந்திருக்கிறார். ஸ்வேதா மேனன் தற்போது ‘கேள்வி’ என்ற படத்திற்கான கதையை எழுதியிருக்கிறார்.
தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரிக்கப்படும் இந்த படத்தை ஹாசிம் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ்.கே.ஜெயன். இந்த வருடத்தின் இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.