நடிகர் கிருஷ்ணாவுக்கு பிப்ரவரி-6ல் திருமணம் – நாளை கோவையில் நிச்சயதார்த்தம்

89

‘அலிபாபா’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா. அதன்பின் ‘கற்றது களவு’, ‘கழுகு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த கிருஷ்ணா ‘கழுகு’ படத்தில் தனது நடிப்பினால் பலரையும் கவர்ந்தார். அவர் நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணாவுக்கு இப்போது கல்யாண வேளை கூடிவந்திருக்கிறது. கோவையைச் சேர்ந்த வைகல்யா என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் கிருஷ்ணா. நிச்சயதார்த்தம் நாளை(நவ-20) மாலை கோவை ஜெனீஸ் கிளப்பில் நடைபெற இருக்கிறது. திருமணத்தை வரும் பிப்ரவரி-6ஆம் தேதி கோவையிலேயே நடத்த தீர்மானித்துள்ளார்கள். திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது.

தற்போது ‘விழித்திரு’, ‘இல்ல ஆனாலும் இருக்கு’, ‘வன்மம்’ போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணா பிரபல தயாரிப்பாளரான பட்டியல் சேகரின் மகன் என்பதும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.