‘காசி’ இயக்குனர் மீது கல்லெறியும் டிராகுலா..!

316


கேரளத்துக்காரர் தான். ஆனால் தமிழில் ‘காசி’ என்ற படத்தை எடுத்து தாய்மார்களின் கண்களை குளமாக்கியதோடு அந்தப்படத்தை நூறு நாட்கள் ஓடவும் வைத்தார். அவர்தான் பிரபல மலையாள இயக்குனர் வினயன். குழந்தைகள் ரசிப்பதற்காகவே குள்ள மனிதர்களை ஒன்று திரட்டி ‘அற்புத தீவு’ என்ற காமெடி படத்தை தந்த அவர்தான் அடுத்ததாக ‘ட்ராகுலா’ என்ற பேய்ப் படத்தை, அதுவும் 3டியில் எடுத்து மிரட்டினார்.

Related Posts

இந்தப்படத்தில் ட்ராகுலாவாக நடித்தவர் சுதீர் என்கிற நடிகர். இவர் தற்போது இயக்குனர் வினயன் தன் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கவில்லை என பரபரப்பு கூட்டியிருக்கிறார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, “நான் ட்ராகுலாவாக நடிக்க எனது உடலை கட்டுக்கோப்பாவாக வைத்திருக்க படத்தில் நடித்து முடிக்கும் வரை கிட்டத்தட்ட எட்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தேன்.. ஆனால் வினயன் தந்த ஊதியமோ வெறும் 96ஆயிரம் ரூபாய்தான். ஆனால் இந்தப்படத்தின் மூலம் அவர் சுமார் நான்கு கோடி லாபம் சம்பாதித்திருக்கிறார். நான் என்னுடைய பொருளாதார சூழ்நிலையை கூறியும் எனக்கு உதவி செய்ய அவர் மறுத்து விட்டார்” என்று கூறியுள்ளார் சுதீர்.

ஆனால் இதுபற்றி வினயன் கூறும்போது, “இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும், இந்திரஜித், ஜெயசூர்யா ஆகியோரை அறிமுகம் செய்தபோது அவர்களுக்கு நான் கொடுத்த ஊதியத்தைவிட சுதீருக்கு அதிகமாகவே தந்துள்ளேன். சொல்லப்போனால் ஒரு புதுமுகமான அவரை வைத்து ரிஸ்க் எடுத்ததற்கு சுதீர்தான் எனக்கு பணம் தரவேண்டும்” என அம்பை அப்படியே சுதீர் பக்கம் திருப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சுதீர் மீது வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

3 Comments
  1. 155073 547039This internet site is my intake , real very good layout and perfect topic material . 513296

  2. story says

    342322 768140Get started with wales ahead practically every planking. Ones wales truly are a compilation of huge planks 1 particular depth advisors certainly is the identical to the entire hull planking however with even bigger density to successfully thrust outward beyond the planking. planking 179758

  3. view details says

    614324 627895Wow, suprisingly I never knew this. Keep up with good posts. 188154

Leave A Reply

Your email address will not be published.