’ஜன்னல் ஓரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அமீர், சூர்யா கலந்து கொண்டனர். முதலில் பேசிய அமீர்,”சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்கள் நல்ல படங்கள் எடுக்கும் கரு. பழனியப்பன் மாதியான இயக்குனர்கள் படத்திலும் அவ்வப்போது நடிக்கனும். அப்போதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.” என்று பேசிவிட்டு அமர, அடுத்து பேச வந்த சூர்யா, “நிச்சயமாக நான் கரு.பழனியப்பன்கிட்ட கதையை கேட்கிறேன். எல்லாம் சரியா இருந்தால் அவர் படத்தில் நடிக்கிறேன்.” என்று அறிவிக்க அரங்கம் கரகோசத்தால் அதிர்ந்தது.