பிரபுவை போல மிமிக்ரி செய்த கார்த்தி – ஏன்? எதற்கு?

62

வளர்ந்துவரும் முன்னணி நடிகர்கள், சினிமாவில் நல்ல ஸ்திரமான ஒரு இடத்தைப் பிடித்ததும் அடுத்தகட்டமாக குறிவைப்பது டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தை தான். ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் முதன் முதலாக நடிக்கும் டபுள் ஆக்ஷன் படங்கள் முக்கியமானவை. இப்போது கார்த்திக்கு ஆல் இன் ஆல் அழகுராஜா மூலம் அந்த ஆசையும் நிறைவேறிவிட்டது.

ஆனால் அதிலும் ஒரு வித்தியாசம் காட்டியுள்ளார் கார்த்தி. கதைப்படி பிரபுவின் மகன்தான் கார்த்தி. படத்தில் பிரபுவுக்கு இளம் வயது ஃபிளாஷ்பேக் ஒன்று வருகிறது. முதலில் பிரபுவின் வாலிப வயது கேரக்டரில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இயக்குனர் ராஜேஸ், ‘பெரும்பாலான மகன்கள் தந்தையின் சாயலில்தானே இருக்கிறார்கள்., கார்த்தியின் தந்தையான பிரபுவும் அவரது இளம் வயதில் கார்த்தி போலத்தானே இருந்திருப்பார், எனவே கார்த்தியையே இளம் வயது பிரபுவாக நடிக்க வைத்தால் என்ன’ என்று மாற்றி யோசித்திருக்கிறார்

இதற்காக பிரபுவின் இளமைக்கால படங்களை டிவிடியில் போட்டுப்பார்த்து, அவரது இளமைக்கால மேனரிசங்களை கவனித்து அதை உள்வாங்கி நடித்திருக்கிறாராம் கார்த்தி. அதுமட்டுமல்ல பிரபுவைப்போலவே குரலும் இருக்கவேண்டும் என்பதால் மெனக்கேட்டு அவரைப்போலவே மிமிக்ரியும் பண்ணியிருக்கிறாராம் கார்த்தி. இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்த பிரபுவின் மனைவி, பிரபுவின் மேனரிசங்களை கார்த்தி அப்படியே பிரதிபலித்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாராம்.

Leave A Reply

Your email address will not be published.