தமிழில் மாதவி, ராதாவிற்கு பிரகு சண்டை காட்சியில் நடிக்கும் கதாநாயகிகள் குறைந்து போனார்கள். அந்த குறையை நீக்கப் போகிறார் ப்ரியா ஆனந்த். அதர்வாவிற்கு ஜோடியாக அவர் நடிக்கப்போகும் ‘இரும்புக்குதிரை’ என்ற படத்தில் படம் முழுக்க சண்டை காட்சியில் நடிக்கப் போகிறார். பைக் ஓட்டவும் கற்று வருகிறார். படத்தில் பைக்கில் அதிரடி சண்டை காட்சியும் உண்டாம். காரணம் இவர் மோதப் போகும் வில்லன் யார் தெரியுமா 7ம் அறிவு படத்தில் நடித்த ஜானி.