கரண், வடிவேலு நடித்த காத்தவராயன் படத்தை இயக்கியவர் சலங்கைதுரை. தற்போது இயக்கிவரும் படம் ‘காந்தர்வன்’. கதிர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். முக்கியமான நகைச்சுவை வேடத்தில் கஞ்சா கருப்பு நடிக்கிறார்.
இந்தப்படம் பற்றி இயக்குனரிடம் கேட்டால், “காத்தவராயன்’ படம் எப்படி நகைச்சுவையில் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்ததோ அது மாதிரி இந்தப்படம் நகைச்சுவையில் மட்டுமல்ல காதலுக்காகவும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன்” என்கிறார் ஒரே வரியில்.
கஞ்சாகருப்பு இந்தப்படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறாராம். இந்தப்படத்திற்குப் பிறகு கஞ்சாகருப்பு ‘கஞ்ச கருப்பு’ என்று பேர் வாங்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் இயக்குனர் சலங்கைதுரை. தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.துரைசாமி இந்தப்படத்தை தயாரிக்கிறார்.