மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான ‘தடையற தாக்க’ திரைப்படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதை பாணிக்காகவும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. மேலும் அருண்விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தான் இயக்க இருக்கும் படத்திற்கு ‘மீகாமன்’ என பெயரிட்டுள்ளார் மகிழ்திருமேனி.
‘மீகாமன் என்றால் ‘மாலுமி’ என்று அர்த்தம். இந்தப்படத்தின் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்திற்கு தமன் இசையமைக்க சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
டிசம்பர் 5ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது. கோவாவைச் சுற்றிய கதைக்களம் என்பதால் வட இந்திய நடிகர்கள் பலரும் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகி மட்டும் இன்னும் தேர்வாகவில்லை. அவர் அடுத்தமாதம் நடைபெறும் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. அனேகமாக நமக்கு கிடைத்த தகவல்களின்படி ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பார் என்று தெரிகிறது.