இந்த வருட ஆரம்பத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தின் வெற்றியும், அந்தப்படம் இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிது. அதனால்தான் சூட்டோடு சூடாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் கமல்.
‘விஸ்வரூபம்-2’வுடன் ஒப்பிட்டால் ‘விஸ்வரூபம்’ ஒரு சின்ன குழந்தை மாதிரி இருக்கிறது என்று ட்ரெய்லரை பார்த்த சிலர் திரி கொளுத்திப்போட, இந்தப்படத்திற்கு முதல் பாகத்தைவிட எதிர்பார்ப்பு இருமடங்காக இருக்கிறது.
படம் முதலில் பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பிறகு குடியரசு தினமான ஜனவரி-26 என்றும் தேதி குறிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரியில் தான் ரிலீஸ் என தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தப்படத்தை கேராளாவில் வெளியிடும் உரிமையை காளிஸ்வரி ஃபிலிம்ஸும், கர்நாடகாவில் வெளியிடும் உரிமையை கணேஷ் ஃபிக்சர்ஸும் நல்ல விலைகொடுத்து வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.