சமீபத்தில் நடந்த என்றென்றும் புன்னகை படத்தின் படபாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமல், “இந்த விழாவிற்கு வர பல தடைகள் இருந்தாலும் பல வகையில் முயன்று என்னை அழைத்து வந்தார்கள். அந்த பிடிவாதம் படத்திலும் இருக்கும் என்றே நான் வந்தேன். தன்னம்பிக்கைக்கும் தலைகனத்திற்கும் மெல்லிய நூல் தான் வித்தியாசம். அந்த தன்னம்பிக்கையை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் கைத்தட்டல் அதிகம் கேட்கும் போது ரொம்பவே கவனமாக இருக்கவேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும். நான் கூட ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஏற்படும் இடைவெளியில் கைத்தட்டல் கேட்பதற்காகவே இது போன்ற விழாக்களுக்கு வருகிறேன். காரணம் இந்த கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம்.” என்றார்.