விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா, நடித்த படம் ’ரம்மி’ இந்த படத்தை லிங்குசாமியிடம் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடு நேற்று நடந்தது. இதன் டிரைலர் அனைவரையும் கவரும் வகையில் மிகவும் மிரட்டலாக தயாராகியுள்ளது. இதில் பேசிய விஜய் சேதுபதி, ”இந்த படம் எனக்கு முக்கியமான படம் இதில நடித்துள்ள அத்தனை பேரும் கடுமையாக உழைச்சிருக்காங்க. சில கதைகளை கேட்டவுடன் இது ஜெயிக்கிற படம்னு தோணும். அந்த படம் இதுதான்.” என்றார்.