காஜலின் தங்கைக்கு விரைவில் கெட்டிமேளம்

160

சினிமாவில் அக்கா, தங்கை என இருவருமே வெற்றிக்கொடி கட்டி பறப்பது எப்போதாவது ஆச்சர்யமாக நடக்கும் விஷயம். அம்பிகா-ராதா, பானுப்ரியா-நிஷாந்தி, ராதிகா-நிரோஷா, நக்மா-ஜோதிகா என அந்தப்பட்டியல் ரொம்பவே சிறியது தான். அதேமாதிரித்தான் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையாக களம் இறங்கினார். தெலுங்கில் நான்கைந்து படங்களில் நடித்த அவர் தமிழில் ‘இஷ்டம்’ என்ற ஒரே படத்தில் மட்டும் நடித்தார்.

ஆனால் அந்தப்படம் ஓடாததால் அதற்கடுத்து நிஷா அகர்வாலுக்கு வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதைத்தொடர்ந்து நிஷாவுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்த அவரது பெற்றோர் மும்பையைச் சேர்ந்த கரண் என்பவரை மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்துள்ளனர். வரும் டிசம்பர்-28ஆம் தேதி இவர்களது திருமணம் மும்பையில் நடைபெற இருக்கிறது. படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் தனது தங்கையின் வேலைகளை துரிதமாக முடுக்கிவிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

1 Comment
  1. Verloskundigen Kampen says

    442081 329814Good day very cool site!!Man .. Beautiful .. Wonderful. 392181

Leave A Reply

Your email address will not be published.