‘வழக்கு எண் 18/9’ படத்தில் அறிமுகமான மனிஷா யாதவ் அந்தப்படத்திலேயே திரையுலகினரின் கவனத்தை சின்னதாக ஈர்த்திருந்தார். அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில் தனது நடிப்பில் இன்னும் மெருகேறியிருக்கிறார் மனிஷா. இந்த சூழ்நிலையில் அவர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது.
இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை தொடர்ந்து தனது மூன்றவது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நிதானமாக செயல்பட்டு வருகிறார். இந்தப்படத்திலும் தனுஷுடன் சேர்ந்து ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் அவரது படத்தில் மனிஷா நடிப்பதாக வந்த தகவல் பற்றி வெற்றிமாறனிடம் கேட்டபோது புன்னகையுடன் இந்த செய்தியை மறுக்கிறார்.
“எப்போதுமே என் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தபின்னர் தான் அதில் கதாநாயகியாக யாரை நடிக்கவைக்கலாம் என முடிவுசெய்வேன். இன்னும் ஸ்கிரிப்ட் வேலைகளையே நான் முடிக்கவில்லை. அப்புறம் எப்படி இந்தமாதிரி செய்தி பரவியது என தெரியவில்லை. ஆனால் இதில் துளிகூட உண்மை இல்லை” என்கிறார் வெற்றிமாறன்.