விஜய் ஜோடி ஒருவர் தான் ; காஜலா..? கீர்த்தியா..?

238

vijay heroine
‘தெறி’ படத்தை தொடர்ந்து விஜய்யின் 60வது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்குகிறார் என்பது ஜனவரி மாதத்திற்கு 31 நாட்கள் என்பதுபோல முடிவான விஷயம் தான்.. இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பதும் கூட ஏற்கனவே பைனல் ஆகிவிட்டது.. கதாநாயகியாக காஜல் அகர்வால் மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்கிறார் என சொல்லப்பட்டு வந்தது..

ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.. ஒருவேளை இரண்டு ஹீரோயின்ஸ் சப்ஜெக்ட்டா என்றால், அதெல்லாம் இல்லை சிங்கிள் ஹீரோயின் தான்.. அது கீர்த்தி சுரேஷ் தான் என்றும் சொல்லப்படுகிறது.. சமீபத்தில் வெளியான ‘ரஜினி முருகன்’ படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளதால் விஜய்யுடன் அவர் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் என்கிறார்கள்.

Comments are closed.