ரஜினி யுனிவர்சிட்டியில் ஆர்யாவும் பட்டம் வாங்கினார்..!

172

arya in thanikaattu raja
அஜித், விஜய் முதல் அனைத்து இளம் நடிகர்களுக்கும் இருக்கும் நியாயமான ஆசைதான் தங்களது படத்திற்கு எப்படியாவது ரஜினி பட டைட்டிலை கேட்டு வாங்கிவிடுவது என்பது.. கிட்டத்தட்ட ரஜினியின் 150 டைட்டில்களில் ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’, ‘மாப்பிள்ளை’ ‘நான் மகான் அல்ல’, ‘நான் சிவப்பு மனிதன்’, ‘தங்கமகன்’ ‘தில்லுமுல்லு’, ‘முரட்டுக்காளை’, ‘குரு சிஷ்யன்’, ‘ராஜாதி ராஜா’ மற்றும் தற்போது ஜீவாவுக்கு ‘போக்கிரி ராஜா’, உதயநிதிக்கு ‘மனிதன்’ என இதுவரை பத்துக்கும் மேற்பட்ட டைட்டில்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.

இதில் தனுஷ் தான் ரஜினி டைட்டில்களை அதிகம் உபயோகப்படுத்தி இருக்கிறார்.. ரஜினி டைட்டிலை தங்களது படத்திற்கு வைப்பது என்பது ரஜினி என்கிற யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் வாங்குவது போலத்தான். இப்போது ஆர்யாவுக்கும் அந்த பட்டம் கிடைத்துள்ளது..

யெஸ்.. மண்மணம் கமழ தாத்தா-பேரன் உறவின் மேன்மையை படமாக்கிய ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் ஆர்யாவை வைத்து இயக்கவுள்ள ஆக்சன் த்ரில்லர் படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்கிற ரஜினி பட டைட்டிலைத்தான் வைத்துள்ளனர். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படம் காடு சார்ந்த பகுதிகளில் சாகசம் நிறைந்த அட்வென்ட்ச்சர் படமாக உருவாக இருக்கிறதாம்.

Comments are closed.