கே.எஸ்.ரவிகுமாருக்கு அறிமுகமோ முன்னுரையோ தேவையா என்ன? ஒரே காலகட்டத்தில் ரஜினி, கமல் இருவர் படங்களை இயக்கும் அளவுக்கு அவர்களது நட்பு வட்டாரத்தில் பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஆகியோருக்குப்பின் இன்றும் அவர்கள் மனதில் இருப்பது இவர் மட்டுமே திரையுலகில் நுழைந்து இன்று 25ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கே.எஸ்.ரவிகுமாரின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கொண்டாடும் விதத்தில், ராஜ் டிவியும், தமிழ் திரைப்பட சங்கமும் இணைந்து மாபெரும் பாராட்டு விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கு பெரும் இந்த பாராட்டு விழா வரும் ஜனவரி 4ஆம் தேதி, மாலை 5 மணிக்கு, சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. கமல்ஹாசன் அவர்கள் கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவுப்பரிசை வழங்கவிருக்கிறார்.
இந்த வெற்றி விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்குபெரும் கலைநிகழ்ச்சிகளும், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் படங்களுக்கு இசையமைத்த பல இசையமைப்பாளர்கள் பங்குபெரும் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.