2015ஐ தன்வசப்படுத்திய ஜெயம் ரவி..!

234

jayam ravi 2

சந்தேகமே இல்லை.. இந்த வருடத்தின் வெற்றி நாயகன் என்கிற பட்டம் உண்மையிலேயே ஜெயம் ரவிக்குத்தான் பொருந்தும்.. இந்த வருடத்தில் மொத்தாம் நான்கு படங்களில் நடித்த ஜெயம் ரவி, அதில் இரண்டு காதல் கமர்ஷியல், இரண்டு ஆக்சன் என ஏரியா பிரித்திருந்தார்..

இதில் சகலகலா வல்லவன் மட்டும் சரியாக போகவில்லை.. ஆனால் ‘ரோமியோ ஜூலியட்’ படம் அட, ஜெயம் ரவி நல்லா பண்ணிருக்கார் இல்ல, என நம்மை யோசிக்க வைத்தபோது ‘தனி ஒருவன்’ ஆக வந்து மிரட்டோ மிரட்டென்று மிரட்டி விட்டார்.

ஒகே இந்த வருடத்திற்கு இவருக்கு இந்த ஒரு ஹிட்டே மிகப்பெரிய எனர்ஜியாக இருக்கும் என நினைத்தால், வருட இறுதி வாரத்தில் வெளியாகியுள்ள ‘பூலோகம்’ படமும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. படத்தில் காதல், காமெடியை குறைத்து ஒரு பொழுதுபோக்கு படத்தை இப்படியும் ஆக்சன் பிளேவரில் தரமுடியும் என்பதை பூலோகம் நிரூபித்துள்ளது..

ஜெயம் ரவிக்கு இந்த வருடம் இனிய வருடம் தான் போங்கள்..

Comments are closed.