
பாக்யராஜின் சிஷ்யர்களில் ஒருவரான ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள படம் தான் ‘காதல் காலம்’. எல்லாவித வசதியோடும் வளரும் ஒரு பையன், தான் செய்வதெல்லாம் சரி என்று நினைக்கிறான். அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பெற்றோரும் தவறிவிட்டால் என்னவாகும்…? இப்படிப்பட்டவனுடைய வாழ்க்கையில் காதலுக்கான இடம், அதன் பயணம் ஆகியவற்றையும் இணைத்து ஒரு கமர்ஷியல் படமாக படத்தை உருவாக்கியுள்ளாராம்.
இதில் சந்துரு கதாநாயகனாகவும் நித்யா ஷெட்டி, சார்விசெக்குரி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜெயானந்தன் இசையில் உருவான காதல் காலம் படத்தின் பாடல்களை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட அவரது சிஷ்யர் பாண்டியராஜன் பெற்றுக்கொண்டார். விழாவில் தனது சிஷ்யனை வாழ்த்துவதற்காக பாக்யராஜ தனது மனைவி பூர்ணிமாவுடன் கலந்துகொண்டார்.
இந்த விழாவிற்கு பாக்யராஜ் முன்கூட்டியே வந்துவிட, அவரது முக்கிய சிஷ்யரான பாண்டியராஜன் வருவதற்கு சற்று காலதாமதமானதால் விழாவை ஆரம்பிக்கவும் தாமதம் ஏற்பட்டது. விழாவில் பேசும்போது இதுபற்றி குறிப்பிட்ட பாக்யராஜ், “எனது சிஷ்யன் பாண்டியராஜனுக்காக நான் காத்திருந்ததை விட எனக்கு பெருமை வேறு என்ன இருக்கிறது.. அந்த அளவுக்கு எனது சிஷ்யர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதே எனக்கு சந்தோசம் தான்” என குறிப்பிட்டார்.
Comments are closed.