’சாட்டை’ படத்தில் ஹீரோவாக நடித்த யுவன் அடுத்து ’ஜாக்கி’ என்ற புது படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். கிராமத்தில் செய்த சிறிய தவறால் சென்னைக்கு வரும் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் கதை. இந்த படத்தில் வரும் ஒரு வளைகாப்பு பாடலுக்கு யாரை ஆட வைக்கலாம் என்று யூனிட்டே யோசித்துக் கொண்டிருந்தது. ஆனால் இயக்குனர் கோவை ரவிராஜன் ”இந்த பாடலுக்கு நளினிதான் டான்ஸ் ஆடப்போறாங்க.’ என்றதும் யூனிட்டே ஆடிப் போனதாம். இசை ஸ்ரீகாந்த் தேவா அப்போ ஆட்டத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன?