பரபரப்பாக பேசப்பட்ட ஜீவனை சமீபகாலமாக திரையில் பார்க்க முடியவில்லை. இது பற்றி அவரிடம் கேட்டதற்கு,
“சமீபத்தில் என்னோட அப்பா இறந்து போய்விட்டார். அதனால் அவர் செய்து வந்த தொழில்களை கவனித்துகொள்வதற்காகவும், அதற்கான நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தவும் சில நாட்கள் தேவைப்பட்டது. அதனால் தான் இந்த இடைவெளி. ஆனால் இப்போது மறுபடியும் புது அவதாரம் எடுக்கப்போகிறேன். இயக்குனர் செல்வா சொன்ன கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அவரோட சேர்ந்து நாலாவதா ஒரு படம் பண்ணப்போறேன்.” என்றார் ஜீவன்.