ஜூன்-26ல் வெளியாகிறது ‘நேற்று இன்று நாளை’’..!

243

எப்படி பேய்ப்படங்களுக்கென ஒரு தனி மவுசு இருக்கிறதோ, அதேபோல சயின்ஸ் பிக்சன் படங்களுக்கும் ரசிகர்களிடம், குறிப்பாக குழந்தைகளிடம் அதிக வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.. விஷ்ணு, மியா ஜார்ஜ் நடித்துள்ள ‘நேற்று இன்று நாளை’ திரைப்படம் கூட அந்தவிதமாக சயின்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதால் அதற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

கால எந்திரம் ஒன்றை தயார் செய்கிறார் விஞ்ஞானி. அதில் விஷ்ணு, மியா, கருணாகரன் உட்பட மூன்று பேரும் ஏறி வெவ்வேறு காலகட்டத்திற்கு பயணிக்கிறார்கள். இதுபோதாதா சுவாரசியம் கூட்டுவதற்கு.? இந்தப்படத்தை இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவிகுமார் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கான இசையை “ஹிப் ஹாப் தமிழா” புகழ் ஆதியும், படத்தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்துள்ளனர். ஒளிப்பதிவு வசந்த் (அறிமுகம்). ஸ்டுடியோ கீரின் நிறுவனத்துடன் இணைந்து சி.வி.குமார் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன்-26ல் வெளியாகிறது

Comments are closed.