
பொதுவாக ஒரு படத்தை மால் தியேட்டர், மல்டி பிளக்ஸ் ஆடியன்ஸ். பி அண்ட் சி ஆடியன்ஸ்களுக்குத்தான் செட்டாகும் என்று பிரிக்கலாம். ஆனால் அப்படி எந்த பிரிவின் கீழும் வராத படம் ‘வில் அம்பு’ என்கிறார் படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம்.. இன்னொரு புதுமையாக படத்தின் கதையோட்டத்தில் ரசிகர்களும் கூடவே இருப்பார்களாம்.
படத்தின் கதைக்குள் நடைபெறும் சம்பவங்களுக்கு சாட்சிகளாக இருப்பார்கள். அப்படியான ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.. வெறும் சினிமா பார்த்த உணர்வு மட்டுமல்லாது நாமும் நடைபெற்ற அந்த நிகழ்வில் பங்கேற்று வந்தமாதிரியான உணர்வை ரசிகர்கள் பெறுவார்கள் என்கிறார் ரமேஷ் சுப்பிரமணியம்.
வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண் கதாநாயகர்களாக நடிக்க, சாந்தினி, சிருஷ்டி டாங்கே, சமஸ்கிருதி என மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் தம்பி, மற்றும் நந்தகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.
இதில் கதாநாயகர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கடைசி வரை சந்தித்துக்கொள்ளவே மாட்டார்கள் என்பதும், ஆனால் ஒருவரால் இன்னொருவருக்கு பிரச்சனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும் என்பதும் படத்தின் சுவராஸ்யத்தை கூட்டும் காரணி.
Comments are closed.