யானையை கட்டி ‘சீனி’ போடும் செந்தில்..!

234

யானையை கட்டி தீனி போடலாம். ஆனால் சீனி போடமுடியுமா..? நகைச்சுவை நடிகர் செந்தில் யானைப்பாகனாக மாறி என்ன செய்கிறார் என்பது ‘சீனி’ படத்தை பார்த்தால் தெரிந்துவிடப்போகிறது. இந்தப்படத்தின் மூலம் செந்தில் ரிட்டர்ன் ஆகியிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

படத்தின் கதை யானையை பற்றியதா..?.. இல்லை… கதையுடன் இணைந்து யானையும் கூடவே வருவதுதான் உண்மை. மதுரை பெருமாள் கோவில் யானை ‘சீதா’வாக நடித்திருக்கும் இந்த யானையை டி.வி.எஸ் நிறுவனம் பராமரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் கதாநாயகன் அரசாங்க வேலையை எதிர்பார்க்காமல் தொழிலதிபர் ஆக முயற்சிக்கிறான். அவனுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியாக யார் யார் நிற்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

ராஜதுரை என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை மக்கள் தொடர்பாளரான மதுரை செல்வம் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.கதாநாயகியாக ஓவியா நடிக்க, புதுமுகங்களான சஞ்சீவி ஹீரோவாக நடித்திருக்கிறார். காமெடியனாக பரத்ரவி என்பவர் அறிமுகமாகியுள்ளாராம். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் விவேக், ஆர்.கே.செல்வமணி, பவர்ஸ்டார், செந்தில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments are closed.