விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இவன் வேற மாதிரி’ படம் ரிலீஸுக்கு தயாராகி விட்டது. இந்த நிலையில் ‘தூங்காநகரம்’ கௌரவ் இயக்கத்தில் தற்போது, தான் நடித்துவரும் ‘சிகரம் தொடு’ படத்தில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு.
‘சிகரம் தொடு’ என பெயர் வைத்ததாலோ என்னவோ இந்தப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பகுதி இமயமலை மற்றும் அதனை சுற்றியுள்ள சிகரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நடத்தி வருகிறார் கௌரவ். ருத்ரபிரயாக், கங்கோத்ரி, சிவபுரி, உத்ரகாசி, ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் என ஆறு சிகரங்களில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த இடங்களில் கிட்டத்தட்ட 13 நாட்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். அதன்பிறகு அங்கே மைனஸ் இரண்டு டிகிரி குளிர் சூழல் ஆரம்பித்து விட, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முடியாமல் சென்னை திரும்பியுள்ளது யூனிட். குளிர் சீசன் முடிந்ததும் மீண்டும் சிகரங்களை நோக்கி படையெடுக்க இருக்கிறார் கௌரவ்.
Wow, superb weblog format! How lengthy have you ever been blogging for?
you make blogging glance easy. The full look of your website is wonderful, let alone the content!
You can see similar here ecommerce