ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் – மலையாளத்தில் யுடிவி அதிரடி

131

இந்தி, தமிழ் திரையுலகில் பிரமாண்டமான படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வரும் யுடிவி நிறுவனம் இரண்டு இடங்களிலும் தனது கால்களை அழுத்தமாக ஊன்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் கடந்த வருடம் மோகன்லால் நடித்த ‘கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தது.

இதனை தொடர்ந்து மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள யுடிவி நிறுவனம் தற்போது அங்கே தயாராகி வரும் ஐந்து படங்களின் தயாரிப்பில் கைகோர்த்துள்ளது. சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் ‘கூத்தரா’, ஆசிஃப் அலி நடிக்கும் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’, சன்னி வெயின் நடிக்கும் ‘ஸ்டாரிங் பௌர்ணமி’, மற்றும் நிக்காஹ், ரஷ்புதின் ஆகிய படங்களுடன் இணைந்துள்ளது.

தற்போது தமிழில் விக்ரம்பிரபு நடிக்க சரவணன் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ படத்தில் திருப்பதி பிரதர்ஸுடன் இணைந்து படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது யுடிவி. ஏற்கனவே திருப்பதி பிரதர்ஸுடன் ‘வேட்டை’ படத்திலும் யுடிவி இணைந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.