ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றமான செய்தி தான் இது.. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர்-12ஆம் தேதி ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்தார்கள். ஆனால் இப்போதோ ஜனவரி முதல்வாரத்திற்கு விழாவை மாற்றி வைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட ‘கோச்சடையான்’ தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல்-14க்கு தள்ளிவைக்கப்பட்டது. இப்போது ஆடியோ ரிலீஸும் தள்ளிப்போவதால் ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள். வரும் 12ஆம் தேதி தலைவர், அவர் வாயாலேயே ஏதாவது தகவல் சொல்வார் என ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா ரஜினி?
Very interesting information!Perfect just what I was looking for!Raise your business