இயற்கை, ஈ, பேரண்மை என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன். ஆனாலும் மூன்று படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன. தற்போது ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க, ‘புறம்போக்கு’ படத்தின் மூலம் பிரம்மாண்ட கூட்டணி அமைத்திருக்கிறார் ஜனநாதன்.
படத்தை யூடிவி மோஷன் பிக்சர்ஸுடன், ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை வரும் புத்தாண்டு தினத்தன்று வெளியிட இருப்பதாக யுடிவி தலைமை நிர்வாகி தனஞ்செயன் தெரிவித்து இருக்கிறார். மேலும் படப்பிடிப்பும் கூட அந்த வாரத்திலேயே தொடங்கும் எனவும் கூறியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ஏகாம்பரம் கவனிக்க, படத்தொகுப்பு செய்ய இருக்கிறார் வி.டி.விஜயன். மேலும் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது படத்தின் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.