சிவகார்த்திகேயன், தற்போது நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார். இதற்காக தனது ஹேர்ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்ஷிகா நடிக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப்படத்தின் கதை, திரைக்கதையை எழுத அவரது சிஷ்யரான திருக்குமரன் இந்தப்படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் மூலம் சிவகார்த்திகேயனுக்கு சூப்பர்ஹிட் பாடல்களை தந்த அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், சிவகார்த்திகேயன் ஊர் சுற்றுவது எல்லாம் காஸ்ட்லியான பைக்கில்தான். அதனால் இந்தப்படத்திற்காக சமீபத்தில் சிவகார்த்திகேயன், ஹன்ஷிகா சம்பந்தப்பட்ட அக்மார்க் சென்னைப்பாடல் ஒன்றை பைக்கை மையமாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் அதில் வித்தியாசம் காட்டி பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் திருக்குமரன். இந்தப்பாடலில் 500சிசி புல்லட்டிலிருந்து, ஃபாரின் பைக் வரை விதம்விதமான ஐந்து பைக்குகளை ஓட்டி சாதனை படைத்திருக்கிறார் ஹன்ஷிகா., பாடல்காட்சி படமாக்கப்படுவதற்கு முன்னதாக வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே இதற்காக பயிற்சி எடுத்துக்கொண்ட ஹன்ஷிகா பாடல்காட்சிகளில் பிரமாதமாக பைக் ஓட்டி அசத்தினாராம்.