ஆயிரம் கையெழுத்துகள் போட்ட இசைஞானி..!

172

ilaiyaraja sign

இந்த மழைவெள்ள நிவாரண பணிகளில் தமிழகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது 72 வயதான இளையராஜாவின் உதவியும், அர்ப்பணிப்பு உணர்வும்தான். அந்தவகையில் ராக தேவன் மக்களை ரட்சிக்க வந்த தேவனாகவே மாறினார். அவருக்கு தோள் கொடுத்து நின்றவர்கள் தன்னார்வலர்களாக கைகோர்த்த இளைஞர் பட்டாளம் தான்..

நேற்று எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு இவர்களை கௌரவப்படுத்தினார் இசைஞானி இளையராஜா. இந்த நிவாரணப்பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு தானே சுயமாக கையெழுத்திட்டு சான்றிதழ்கள் வழங்கிய இளையராஜா, இதற்காக நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே இருந்தார் என்பது பிரமிக்க வைக்கிறது..

Comments are closed.