ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தியில் இளையதிலகம் பிரபு

87

கேரளத்துக்காரர் தான். ஆனால் தமிழில் ‘காசி’ என்ற அழுகாச்சி படத்தை எடுத்து தாய்மார்களின் கண்களை குளமாக்கியதோடு அந்தப்படத்தை நூறு நாட்கள் ஓடவும் வைத்தார் இயக்குனர் வினயன். குழந்தைகள் ரசிப்பதற்காகவே குள்ள மனிதர்களை ஒன்று திரட்டி ‘அற்புத தீவு’ என்ற காமெடி படத்தை தந்தார். அடுத்ததாக ‘ட்ராகுலா’ என்ற பேய்ப்படத்தை, அதுவும் 3டியில் எடுத்து மிரட்டினார் வினயன்.

தற்போது மீண்டும் குழந்தைகளை கவரும் விதமாக ‘லிட்டில் சூப்பர்மேன்’ என்ற படத்தை தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிப்படமாக எடுத்துவருகிறார் வினயன். இந்தப்படத்தை 2டி மற்றும் 3டியில் பிரமாண்டமாக எடுப்பதால், அதற்காக ஹாலிவுட்டிலிருந்து தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்து வந்திருக்கிறார்.

அவரது முந்தைய படமான ‘ட்ராகுலா’ படத்தைப்போல இந்தப்படத்தையும் வெளிநாட்டுப் பின்னணியில் எடுக்கிறார். இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் நம்ம இளைய திலகம் பிரபுவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். பிரபு ஏற்கனவே இவரது ‘ட்ராகுலா’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.