விக்ரம் பிரபுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

214

 

நடிகர்களின் வாரிசுகள் பலர் சினிமாவில் நுழைவது வாடிக்கைதான் என்றாலும் அதில் ஒருசிலர் தான் தங்களுக்குரிய இடத்தை தக்கவைத்து கொள்கிறார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் குடும்பத்திலிருந்து, இளையதிலகம் பிரபுவின் வாரிசான விக்ரம் பிரபு அடியெடுத்து வைத்தபோது யாருக்கும் அவரது எதிர்காலம் மீது எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.

காரணம் நடிகர் திலகத்தின் ரத்தம் எப்படி இளையதிலகம் பிரபுவை வழி நடத்தியதோ, அந்த அற்புதம் விக்ரம் பிரபுவுக்கும் நடக்காமலா போய்விடும் என்ற எண்ணம் தான். அதற்கேற்ற மாதிரி, தான் நடிக்கும் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து படிப்படியாக முன்னேறி வருகிறார் விக்ரம் பிரபு. இன்று பிறந்தநாள் காணும் விக்ரம் பிரபுவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.