விறு விறுப்பாக தயாராகும் இளையராஜாவின் பள்ளிக்கூடம்

113

இசைஞானி இளையராஜாவின் நீண்ட நாள் கனவு அது. அவர் பிறந்த ஊரான பண்ணைப்புரத்திற்கு அந்த பாமர மக்கள் பயன் பெறும் வகையில் தன் சார்பில் ஒரு பங்களிப்பை செய்யவேண்டும் என்பது இளையராஜாவின் ஆசை. அவர் ஆசையை பிள்ளைகள் கார்த்திக்ராஜா, யுவன், ஆகியோரிடம் தெரிவிக்க, ஜீவா-இளையராஜா அறக்கட்டளை உருவானது.

இந்த அறக்கட்டளை மூலமாக பண்ணைப்புரத்தில் +2 வரையிலான பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் தயாரனது. சி.பி.எஸ்.ஈ. பாட முறைப்படி அமைந்த இந்த பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றி இளையராஜா சார்பில், ”டெல்லியில் படிக்கும் ஒரு மாணவனின் கல்வித் தரத்தை இந்த கிராமத்தில் படிக்கும் மாணவனும் பெற வேண்டும். நல்ல மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களின் கல்வி செலவை பள்ளி நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும் இந்த இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்”. என்று தெரிவிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு கட்டிடப் பணியை துவக்கி வைத்தார் இளையராஜா. இப்போது அந்த வேலைகள் முழுவீச்சில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தேனிக்கு சென்று பணிகளை பார்வையிட்டு வருகிறார் இசைஞானி.

Leave A Reply

Your email address will not be published.