சமீபத்தில் ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து திடீரென மாயமானார் பாலிவுட்டின் தற்போதைய கனவுக்கன்னி தீபிகா படுகோனே. இந்த விஷயம் வெளியே பரவ ஆரம்பித்ததும் தீபிகாவின் பி.ஆர்.ஓ.க்கள் அவருக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் வீட்டில் ஓய்வு எடுக்கிறார் என்று சொல்லி சமாளித்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு நிருபர் மட்டும் எப்படியோ தீபிகாவின் பர்சனல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சிக்க, அப்போது தீபிகா யாருடனோ பேசிக்கொண்டிருந்ததால் கால் வெயிட்டிங்கில் போனது. ஆனால் “நீங்கள் தொடர்புகொள்ளும் நபர்…” என அதற்கான ஆட்டோமேட்டிக் ரெக்கார்டு பதில் கன்னட மொழியில் வந்திருக்கிறது. ஆக தீபிகா வீட்டில் இல்லை, பெங்களூருக்கு போய்விட்டார் என்ற தகவல் மீடியாவுக்கு வெளிச்சமானது.
இதனால் கோபமான தீபிகாவின் தந்தை சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் கஸ்டமர் கேர் அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்து “ஒரு பிரபலத்தின் நம்பருக்கு இப்படியா, எந்த இடத்தில் இருந்து பேசுகிறார்கள் என ஈஸியாக கண்டுபிடிக்கும்படி ஆட்டோமேட்டிக் ரெக்கார்டு பதிலை வைப்பது.. இத்தனைக்கும் இது பிரைவேட் நம்பர் வேறு” என கண்டபடி எகிற, எதிர்த்தரப்பில் இருந்து கூலாக வந்த பதில் என்ன தெரியுமா?, “எந்த ஸ்டாராக இருந்தாலும் ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்”. என்ன பேசுவது என தெரியாமல் லைனை கட் பண்ணிவிட்டாராம் தீபிகாவின் தந்தைக்குலம்.
சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் விடுத்த ஒரு ஸ்டேட்மெண்ட்டில், “காத்ரீனா கைஃப்புக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறேன்” என கூறியிருந்தார். தீபிகா திடீரென இப்படி சொல்லாமல் கொள்ளாமல் படப்பிடிப்பைவிட்டு வெளியேற காரணம் ரன்பீரின் இந்த கமெண்ட் அவரை அப்செட்டாக்கியதுதான். இதற்காக அவர் ஏன் அப்செட் ஆகவேண்டும்?. போங்கள்.. உங்களுக்கு ஒவ்வொன்றுக்குமா விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியும்?