செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர்-2ஆம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப்படத்தை ‘ரௌத்திரம்’ கோகுல் இயக்குகிறார். இந்தப்படத்தில் ‘சுமார் மூஞ்சி குமார்’ என்ற கேரக்டரில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. கதாநாயகிகளாக ஸ்வாதி, நந்திதா இருவரும் நடிக்கிறார்கள்.
ராஜாராணி ரிலீஸாவதால்தான் இந்தப்படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் பண்ணுகிறார்களோ என நினைக்கவேண்டாம். இசையமைப்பாளர் சித்தார்த் விபினுடன் சேர்ந்து பின்னணி இசையில் டால்பி அட்மாஸ் முறையில் சில புதிய மாற்றங்களை செய்துவருவதால்தான் இந்த தாமதம் என்கிறார் டைரக்டர் கோகுல்.