வில்லனாக மாறிய தம்பி ராமைய்யா..!

48

மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்துக்குப்பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து 2000-ல் பிரபு, கார்த்திக் இருவரையும் இணைத்து தைபொறந்தச்சு என்ற படத்தை இயக்கியவர் ஆர்.கே.கலைமணி. அதன்பின்னர் பிரபுவை வைத்து சூப்பர் குடும்பம் என்ற படத்தை இயக்கிய கலைமணி, தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம்தான் ‘ஆப்பிள் பெண்ணெ’.

இந்த படத்தில் வத்சன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ரோஜா, தம்பி ராமைய்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தில் ஒரு தாய்க்கும் மகளுக்குமான பாசப்போராட்டத்தை ரோஜா – ஐஸ்வர்யா மேனனை வைத்து சொல்லியிருக்கிறார் கலைமணி.

மேலும் படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்களை வைத்து சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை உருவாக்கியுள்ளார்களாம். நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா இந்தப்படத்தில் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத வில்லன் வேடத்தில் நடிக்கிறார் எந்த பிரச்சனையையும், ஆர்ப்பாட்டமில்லாமல் கொடுமையாக முடித்து விடும் கதாபாத்திரம் இவருடையது.

இந்தப்படத்தில் ரோஜா பாடும் பாடலில் “உணவே மருந்து ….மருந்தே உணவு என்ற கருத்தை சொல்லும் விதமாக ஒவ்வெரு காய்கறி, பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்களை கிடைக்கிறது” என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறோம். என்கிறார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி

Leave A Reply

Your email address will not be published.