பேய்ப்படங்கள் பார்ப்பது என்றால் குழந்தைகளுக்கு ஜாலி தான். ஆனால் இது நாள்வரை குழந்தைகளையே மிரட்டிய பேய்ப்படங்கள் தான் வந்திருக்கின்றன. இந்த முறை குழந்தைகளை குதூகலிக்க வைக்கும் விதமாக வரும் டிச-29ஆம் தேதி வெளியாக உள்ள படம் தான் மாரிசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கு சக்கரம்’
‘புன்னகைப்பூ’ கீதா, திலீப் சுப்பராயன் ஆகியோருடன் ஏகப்பட்ட குழந்தைகள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஜில் ஜங் ஜக் படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தான் இந்தப் படத்துக்கும் இசை அமைக்கிறார். இது ஃபேண்டஸி ஹாரர் காமெடியாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் குட்டீஸ்கள் செய்யும் சில வீர தீர செயல்கள், சந்திக்கும் சிக்கல்கள், ஆகியவற்றை திரில்லாகவும் நகைச்சுவையாகவும் இதில் காட்டியிருக்கிறார்களாம்.
“சஸ்பென்ஸ் , திரில், சுவாரஸ்யம், கிண்டல் எல்லாம் கலந்த ஒரு சுழலில், அதாவது தீபாவளிக்கு சங்கு சக்கரம் விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள். அதனால் தான் ‘சங்கு சக்கரம் என டைட்டில் வைத்துள்ளோம் என்கிறார் இயக்குனர் மாரிசன்.
ட்ரெய்லரை பார்க்கும்போது முப்பது வருடங்களுக்கு முன்பு வெளியான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தைப்போல இந்தப்படம் இருப்பதையும் உணர முடிகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற நகைச்சுவையும் கிண்டல் கேலியும் நிறைந்த படங்களை தயாரித்த லியோ விஷன் ராஜ்குமார் தான் இந்த சங்கு சக்கரம் படத்தையும் தயாரித்துள்ளார்கள்.

Comments are closed.