“மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆசை” – ஹிருத்திக் ரோஷன்

194

தலைப்பை படித்ததுமே என்னடா சூப்பர்ஸ்டாரும் ஹிருத்திக் ரோஷனும் எப்போது சேர்ந்து நடித்தார்கள் என் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டாம். 1986ல் ‘பகவான் தாதா’ என்ற இந்திப்படத்தில் ரஜினியும் ஹிருத்திக் ரோஷனின் தந்தையும் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இந்தப்படத்தில் பனிரெண்டு வயது சிறுவனாக ரஜினியுடன் சேர்ந்து சில காட்சிகளில் நடித்திருந்தார் ஹிருத்திக் ரோஷன். (என்ன ஆச்சர்யம்…! ரஜினியுடன் இந்தப்படத்தில் நடித்திருந்த டேனி டென்சொங்போ தான் 25 வருடம் கழித்து ‘எந்திரன்’ படத்தில் புரஃபெஸர் போரவாக மீண்டும் ரஜினியுடன் நடித்தார்).

சரி விஷயத்துக்கு வருவோம்.. சமீபத்தில் ஹிருத்திக்ரோஷனிடம், தென்னிந்திய நடிகர்களில் நீங்கள் சேர்ந்து நடிக்க விரும்பினால் அது யாராக இருக்கும் என்று கேட்டதுமே தாமதமில்லாமல் உடனே ‘ரஜினி’ என பதில் வந்தது. “ஏற்கனவே சிறுவயதில் ரஜினி சாருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன் என்கிற பெருமை இப்போதிருக்கும் நடிகர்களில் எனக்கு மட்டுமே உண்டு. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு ரியல் ஹீரோ. இன்றும் எனது தந்தையுடன் அதே நட்பை தொடர்ந்து வருகிறார். என் வாழ்க்கையில் பலவற்றிற்கு அவரைத்தான் உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். இனி ஒரு படம் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது என் லைஃப் டைம் சாதனையாக இருக்கும்” என்கிறார் ஹிருத்திக்.

Leave A Reply

Your email address will not be published.