கடந்த 2010-ல் இந்தியில் சூப்பர்ஹிட்டான ‘பேண்ட் பாஜா பாரத்’ திரைப்படம் தான் இப்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் இந்தப்படத்திற்கு ‘ஆஹா கல்யாணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் ஹீரோவாக ‘நான் ஈ’ புகழ் நானி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணிகபூர் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
பாலிவுட் வாணிகபூர் தமிழில் நுழையும்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ‘ஆஹா கல்யாணம்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் சேலை உடுத்திவந்த விதம் பார்வையாளர்களை ‘ஆஹா’ சொல்ல வைத்தது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஃபிலிம்ஃபேர் விருதில் இவருக்கு இந்தியில் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைத்ததில் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறார். இங்கே தமிழில் இரண்டாவது படத்தில் நடிப்பதற்குள் தமிழை கற்றுக்கொண்டுவிடுவேன் என்றும் மூன்றாவது படத்தில் தானே டப்பிங் பேசுவேன் என்றும் சபதம் செய்யாத குறையாக கூறுகிறார் வாணி கபூர்.