பஹத் பாஸிலுடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதிஹாசன்..!

205

‘அன்னயும் ரசூலும்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் ராஜீவ் ரவியும் ஹீரோ பஹத் பாஸிலும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். ஆனால் இந்த முறை ராஜீவ் ரவி படத்தின் கதையை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறார்.

படத்தை இயக்குபவர் நவின் வாசுதேவ். ஒளிப்பதிவாளராக இருந்து இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறும் இவர் ‘டாட்டூ’ என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் கேட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அழுத்தமாக காலூன்றியுள்ள ஸ்ருதிக்கு, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கிறதாம். ஸ்ருதியின் கைவசம் தேதிகள் இருந்தால் கட்டாயம் இந்தப்படத்தில் நடிப்பார் என இயக்குனர் நவின் வாசுதேவ் நம்பிக்கையாக ஸ்ருதியின் பதிலுக்காக காத்திருக்கிறாராம்.

1 Comment
  1. click over here now says

    410374 692901This really is something I really need to try and do a lot of analysis into, thanks for the post 984369

Leave A Reply

Your email address will not be published.