பத்மஸ்ரீ கமலுக்கு மீண்டும் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய கௌரவம் தான் தற்போது வழங்கப்பட்டுள்ள பத்மபூஷண் பட்டம். இந்த விருதை தனது குரு, குடும்பத்தினர் மற்றும் தனது ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார் கமல்.
எதிர்காலத்தில் உங்கள் சுயசரிதையை எழுதுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “அப்படி ஒரு எண்ணம் எனக்கு அறவே இல்லை. காரணம் அப்படி எழுதினால் உண்மையை மட்டுமே எழுதவேண்டும். அந்த உண்மைகள் பலர் மனதை காயப்படுத்தும். நான் யாரையும் ஒருபோதும் காயப்படுத்த விரும்பவில்லை” என திட்டவட்டமாக, அதேசமயம் சற்றே கோபமாகவே மறுத்துவிட்டார் கமல்.