இதுபோல ஒரு சில பேருக்கு மட்டும் தான் அமையும்.. நடிகர் நானிக்கும் அதுபோலத்தான்.. கடந்த வெள்ளியன்று நானி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆஹா கல்யாணம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் சந்தோஷத்தில் இருக்கும் நானிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று அவருக்கு பிறந்தநாளும் கூட.
2008ல் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த நானிக்கு ‘நான் ஈ’ கைகொடுக்க, தெலுங்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராகவும் மாறிவிட்டார். ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் அவரது துறுதுறு நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இன்று பிறந்தநாள் காணும் நானிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.