மலையாளத்தில் சின்னச்சின்ன ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் ஹனிரோஸ். தமிழில் ‘சிங்கம்புலி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தாரே அவர்தான். மீண்டும் கேரளாவுக்கே திரும்பிய இவர் நடித்த ‘த்ரிவேண்ட்ரம் லாட்ஜ்’, ‘ஹோட்டல் கலிஃபோர்னியா’, ‘அஞ்சு சுந்தரிகள்’ படங்கள் எல்லாம் வரிசையாக ஹிட் அடிக்க இப்போது அங்கே முக்கியமான நடிகையாகிவிட்டார் ஹனிரோஸ்.
மலையாளத்தில் இவ்வளவு பிஸியாக இருக்கும் ஹனிரோஸ் தற்போது திலீப் ஹீரோவாக நடிக்கும் ‘ரிங் மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். கதாநாயகி என்றாலும் அதிலும் வில்லத்தனம் காட்டும் கேரக்டராம். படத்தில் விலங்குகளுக்கு பயிற்சி அளிப்பவராக நடிக்கிறார் ஹனிரோஸ்.
கிறிஸ்துமஸ் தினமான இன்றும்கூட ‘ரிங்மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால் கேரளாவில் இருந்தும்கூட தன் குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார் ஹனிரோஸ். இருந்தாலும் இன்று படப்பிடிப்பிலேயே அவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை அறிந்ததும் வருத்தம் மறைந்து சந்தோஷத்தில் இருக்கிறாராம்.
இருப்பினும் இன்று மாலை கூட, அவர் தனது வீட்டிற்குப்போய் குடும்பத்தினருடன் இருக்கமுடியாது. காரணம் இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இன்றுமாலையே இன்னொரு படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூரு பறக்கிறார் ஹனிரோஸ்.