நானும் ஒரு ஆக்ஷன் ஹீரோதான் என நிரூபிக்க நம் கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் ‘சிக்ஸ்பேக்’. இதன்மூலம் கட்டுமஸ்தான தங்களது உடலைக் கட்டும்போது படம்பார்க்கும் ரசிகனுக்கு அவரது திறமையில் எந்தவித சந்தேகமும் வராது அல்லவா?
அந்த வகையில் சூர்யா, தனுஷ், விஷால், லேட்டஸ்ட்டாக பரத் உட்பட பலரும் ஒருமுறை தங்களது படங்களில் சிக்ஸ்பேக் காட்டிவிட்டார்கள். ஆனால் இப்போது தனுஷ் இரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தற்போது தான் நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்துக்காகத்தான் இந்த சிக்ஸ்பேக்’. தனுஷ் ஏற்கனவே ‘பொல்லாதவன்’ படத்திலேயே ‘சிக்ஸ்பேக்’ வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தின் டீஸரை ஜனவரி-1லும் இசைவெளியீட்டு விழாவை காதலர்தினமான பிப்ரவரி-14லிலும் நடத்த உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.