
‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘ உட்பட நான்கு படங்களை இயக்கிய டைரக்டர் ஆர்.கண்ணன் இப்போது ஐந்தாவதாக இயக்கும் படம் தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. பட்த்தை பற்றி அவர் என்ன சொல்றார்னு கேட்கலாம் வாங்க..
இக்கதைக்காக சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்..
டைட்டிலில் வர்ற இரண்டு ராஜாவில் முதல்ராஜா விமல், இரண்டாவது ராஜா சூரி.
ப்ரியா ஆனந்த் மெடிக்கல் ஸ்டுடென்டா நடிக்கிறாங்க.
முதல் கட்ட படப்பிடிப்பை மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் நடத்துகிறோம்.
தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது நடக்கும் ஒரு சம்பவம், அவர்களின் வாழ்கையையே மாற்றுகிறது.
கதை தண்டவாளத்திலிருந்து இறங்கி கார் பயணம், துரத்தல், காதல், கலகலப்பு, விறுவிறுப்பு என கதை ஓட்டம் மூவரின் இலக்கை அடைய வைக்கிறதா… இல்லையா… என்பதே கதையின் சுவாரஸ்யம்.
விமல் – ப்ரியா ஆனந்த் காதல் இதில் கவிதையாக இருக்கும். இரண்டே நாளில் நடக்கிற கதையில், யதார்த்தத்தின் எல்லை மீறாமல், இருவருக்கும் இடையிலான காதலில் நாகரீகம் நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தது என்று வைரமுத்து சார் எழுதிய வார்த்தைக்கு உதாரணமாக இருக்கும்.
ராமாயணம், மகாபாரதத்தில் ‘இவர்தான்’ வில்லன் என்று யாரையும் சொல்ல முடியாது என்பது என் கருத்து. இந்தப் படத்தில் அப்படியொரு கேரக்டர் தான் நாசருக்கு. தொழிலதிபரான இவர், சுயநலவாதியாக இருப்பார். அது வில்லத்தனம் மாதிரி தெரியுமே தவிர வில்லன்னு சொல்ல முடியாது.
நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வேலை செய்யும் டி.இமானும், நான்காவது முறையாக என் படங்களுக்கு தோள் கொடுக்கும் ஒளிப்பதிவாளர் P.G.முத்தையாவும் எனது இரண்டு தண்டவாளங்கள்.