ஹேப்பி பர்த்டே ட்டு ஏ.ஆர்.முருகதாஸ்..!

74

 

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என ஒரு பிரிவினர் இருக்கின்றனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் அந்த பட்டியலை சேர்ந்தவர்தான். முதல் படத்திலேயே அஜித்தையும் அடுத்த படத்தில் அப்போது டாப் ரேங்கில் இருந்த விஜயகாந்தையும் இயக்கும் வாய்ப்பு ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அவர் ஆசிர்வதிக்கப்பட்டவர் தானே..?

இன்றைக்கும் ‘ரமணா’ படம் டிவி.யில் ஒளிபரப்பாகும்போது யாருக்கும் டக்கென்று சேனலை மாற்ற மனசு வராமல் அதிலேயே கொஞ்ச நேரம் லயித்துவிடுவது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை. அந்த அளவுக்கு இளைஞர்கள் மத்தியில் லஞ்சத்திற்கு எதிரான தாக்கத்தை அந்தப்படத்தின் மூலம் ஏற்படுத்தினார் முருகதாஸ்.

தொடர்ந்து சூர்யாவை வைத்து இவர் இயக்கிய ‘கஜினி’ இவரை பாலிவுட்டுக்கு அழைத்துச்சென்றது. ஒரு பக்கம் அமீர்கான், இன்னொரு பக்கம் தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி என முக்கிய பிரபலங்களின் அன்பு பிடியில் சிக்கிய முருகதாஸ் எங்கே தமிழ் சினிமாவை மறந்து அங்கேயே தங்கி விடுவாரோ என்ற சூழலும் உருவானது.

ஆனால் நல்ல வேளையாக ‘ஏழாம் அறிவு’ மூலமாக மீண்டும் தமிழகம் திரும்பியவர் அடுத்து விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’ என்கிற பிளாக் பஸ்டரை கொடுத்ததெல்லாம் வரலாறு. இப்போது விஜய்யை வைத்து மீண்டும் ‘கத்தி’யுடன் களம் காண தயாராக காத்திருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.