அக்டோபர்-2ல் மீண்டும் தொடங்குகிறது ‘பாபநாசம்’ படப்பிடிப்பு..!

124

 

முழுவீச்சில் நடைபெற்று வந்த ‘பாபநாசம்’ படப்பிடிப்பில் யார் கண் பட்டதோ தெரியவில்லை.. கமலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அதன்பின் சிகிச்சை எடுத்து தற்போது ஓரளவு குணமாகிவிட்டார் கமல். இருந்தாலும் கமல் இன்னும் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.

இதனால் சில நாட்களாக தடைபட்டிருந்த படப்பிடிப்பை ஒருவாரம் கழித்து அக்-2ல் மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறார்கள். ‘த்ரிஷ்யம்’ ரீமேக்காக உருவாகிவரும் இந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக மீண்டும் கௌதமி நடிக்கிறார். இவர்களுடன் கலாபவன் மணி, ஆஷா சரத் ஆகியோர் நடிக்க ஜீத்து ஜோசப் படத்தை இயக்கி வருகிறார்.

Comments are closed.