எந்த ஒரு விஷயத்தையும் கேட்ட உடனே ஒத்துக்கொண்டால் அதற்கு மதிப்பு இருக்காது என்பதற்கு ஹன்ஷிகாவின் சமீபத்திய ஸ்டேட்மெண்ட் ஒரு நல்ல உதாரணம். காரணம் சில நாட்களுக்கு முன், சுந்தர்.சி.யுடன் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு, சுந்தர்.சி.யே இந்த செய்தியைப் படித்ததும் சிரித்துவிட்டார் என்றும் இது தவறான செய்தி. சுந்தர்.சி.யுடன் தான் நடிக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார் ஹன்ஷிகா.
ஆனால் தற்போது சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதை ட்விட்டர் இணையதளத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார் ஹன்ஷிகா. தனது வழக்கமான காமெடி பாணியிலிருந்து விலகி இதனை ஒரு த்ரில்லார் படமாக இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. ஹன்ஷிகா தவிர இதில் லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோரும் நடிக்க, இன்னொரு கதாநாயகனாக வினய் நடிக்கிறார்.
அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்தப்படத்தில், தான் வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாகவும் மீண்டும் ஒருமுறை சுந்தர்.சி தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததை எதிர்பார்க்கவில்லை என்றும் ட்விட்டரில் இடைவெளி விடாமல் ட்வீட்டித் தள்ளுகிறார் ஹன்சிகா. தற்போது தெலுங்கில் கோல்மால் உட்பட 3 படங்களிலும், தமிழில் 6 படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, சுந்தர்.சி டைரக்ஷனில் அதிக படங்கள் நடித்த ரம்பாவைப்போல பேர் வாங்குவார் என்று நம்புவோம்.