நன்றாக நடிக்கக்கூடிய நடிகர்தான் டேனியல் பாலாஜி. வில்லனாக மிரட்டி வந்தவர் முத்திரை படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள்தான் கிடைத்தபாடில்லை. ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த டேனியல் பாலாஜி இப்போது ‘ஞானக்கிறுக்கனாக’ அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் செந்தி, அர்ச்சனா கவி என இரண்டு ஹீரோயின்கள். இளையதேவன் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் கதை 30 வருடங்களுக்கு முன்பு திருவாரூர் அருகே நடந்த ஒரு உண்மைச் சம்பவமாகும். அதில் கற்பனை கலக்காமல் படமாக்கி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் இளையதேவன். தம்பி ராமைய்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார் தாஜ்நூர்.
Prev Post
Next Post