கௌதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை’, விக்ரம் பிரபுவுடன் ‘அரிமா நம்பி’ மற்றும் அதர்வாவுடன் ‘இரும்புக்குதிரை’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரியா ஆனந்த்தின் கேரியர் க்ராஃப் சீராகவே உள்ளது. தற்போது அதர்வா, பிரியா ஆனந்த் நடிக்கும் ‘இரும்புக்குதிரை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. யுவராஜ் போஸ் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்தப்படத்தில் ஜானி ட்ரி நியூயன் (அதாங்க.. ஏழாம் அறிவு டாங்லீ) ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சில நாட்களுக்கு முன் பாண்டிச்சேரியில் ‘இரும்புக்குதிரை’ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த அதர்வா, ப்ரியா ஆனந்த் இருவரும் அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இத்தாலிக்கு பறந்துவிட்டார்கள். அங்கே 20 நாட்கள் முகாமிட்டுள்ள ‘இரும்புக்குதிரை’ படக்குழுவினர் சில பாடல்களையும் ஒரு சில சண்டைக்காட்சிகளையும் படமாக்குகிறார்கள். பைக் சாகசம் செய்யும் இளைஞர்களைப் பற்றி ஒரு முழுநீள ஆக்ஷன் படமாக இது உருவாகிறதாம்
சமீபத்தில் பிரியா ஆனந்த் நடித்து ரிலீஸான ‘வணக்கம் சென்னை’ படத்தில் அவருக்கு ஒரு ஃபைட் சீன் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்தப்படத்திலும் அவருக்கு அதர்வாவுடன் சேர்ந்து சண்டைக்காட்சிகளில் நடிக்க வேண்டியதிருந்தது. இதற்காக மலேசியாவைச் சேர்ந்த சண்டைப்பயிற்சி நிபுணர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இவர்தான் அயன், சிங்கம்-2 படங்களுக்கும் பணியாற்றியவர். இதுதவிர பைக் சேசிங் காட்சிகளும் படமாக்கப்படிருக்கின்றன.