புறக்கணிக்கும் தயாரிப்பாளர்கள்.. சிக்கலில் நஸ்ரியா..!

87

நான்கு சுவருக்குள் நான்குபேர் முன்னிலையில் சுமூகமாக பேசித்தீர்த்திருக்க கூடிய விஷயம். ஆனால் இதை நஸ்ரியா ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தினார் என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது. நடிகர்சங்கம், கமிஷனர் அலுவலகம் என புகார்களை அள்ளி வீசியதும், பின்னர் இரண்டு நாட்கள் கழித்து அப்படியே அந்த விஷயத்தில் பல்டி அடித்து தயாரிப்பாளருடன் சமாதானம் ஆனதும் என ‘நய்யாண்டி’ பட விஷயத்தில் அவர் பண்ணிய ஆர்ப்பாட்டங்கள் இருக்கிறதே.. அத்தனையும் ‘நய்யாண்டி’ படத்துக்கு உண்மையிலேயே எக்ஸ்ட்ரா பப்ளிசிட்டிதான்.

ஆனால் நஸ்ரியா இதை தனது உணர்வுப்பூர்வமாக செய்தாரோ, இல்லை பப்ளிசிட்டிக்காக செய்தாரோ தெரியாது. நாம் முன்கூட்டியே சொன்னதுபோல அடுத்ததாக நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய நினைத்த தயாரிப்பாளர்கள் தற்போது ‘நய்யாண்டி’ விவகாரத்தில் நஸ்ரியா நடந்துகொண்ட விதத்தை பார்த்து அப்படியே பின்வாங்கிவிட்டார்கள். அதிலும் ஒரே ஒரு க்ளோசப் காட்சிக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் என்றால், வீணாக நாம் ஏன் எரிகிற கொள்ளியை எடுத்து தலையச் சொரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களாம்.

நஸ்ரியாவை வைத்து படம் எடுத்துவிட்டு நாளை படம் முடிந்ததும் வியாபாரம் சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிப்பதா அல்லது இவர் ஏதாவது பிரச்சனையை கிளப்பினால் அதை சமாளிக்க கோர்ட்டுக்கு அலைவதா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளதால் நஸ்ரியா இருக்கும் திசைக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டு விட்டார்களாம். நிலைமை சீரியஸாவதை உணர்ந்த நஸ்ரியாவும் தமிழில் கைவசம் இருக்கும் படங்களை நடித்துக் கொடுத்துவிட்டு இனி மலையாளக் கரையோரம் ஒதுங்க வேண்டியதுதான் என முடிவு செய்திருக்கிறாராம்.

2 Comments
  1. ahr147 says

    RELX的煙彈口感多樣,煙霧量適中 一次性小煙

  2. ahr147 says

    深入了解 Sacai 鞋款,揭示其獨特的功能和設計。sacai哪裡買最便宜

Leave A Reply

Your email address will not be published.